தந்தை மறைவுக்கு காரணம் என்ன? அஜித்தின் அப்பா தமிழனா இல்லையா? விமர்சிக்கும் நெட்டிசன்கள்.., பதிலடி கொடுக்கும் ரசிகர்கள்!!

0
தந்தை மறைவுக்கு காரணம் என்ன? அஜித்தின் அப்பா தமிழனா இல்லையா? விமர்சிக்கும் நெட்டிசன்கள்.., பதிலடி கொடுக்கும் ரசிகர்கள்!!
தந்தை மறைவுக்கு காரணம் என்ன? அஜித்தின் அப்பா தமிழனா இல்லையா? விமர்சிக்கும் நெட்டிசன்கள்.., பதிலடி கொடுக்கும் ரசிகர்கள்!!

அப்பாவின் இறப்பு விவரம் குறித்து நடிகர் அஜித் குமார் மற்றும்அவரின் சகோதர்கள் அனைவரும் தங்களது இணையதள பக்கத்தில் உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அஜித்தின் தந்தை மரணம்:

தமிழ் சினிமாவில் முக்கிய அந்தஸ்தை பெற்றவர் தான் நடிகர் அஜித் குமார். தற்போது இவர் நடிக்கும் ஏகே 62 படத்தின் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அவரின் அஜித்தின் தந்தை பி சுப்ரமணியம் இன்று காலமானார். அவரின் இறப்பு குறித்து அஜித் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, எனது தந்தை உடல்நலக்குறைவால் படுத்த படுக்கையாக கிடந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

சொல்ல போனால், கடந்த 4 வருடங்களாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்த என்னுடைய தந்தையை அன்போடும், பாசத்தோடும் மிகுந்த அக்கறையோடும் பார்த்து வந்தோம், இருப்பினும் இன்று அதிகாலை தூங்கும் வேளையில் உயிரிழந்துள்ளார். மேலும் எனது தந்தையின் இறுதி சடங்கை குடும்ப நிகழ்வாகவே நடத்த விரும்புகிறோம். அதாவது தனிப்பட்ட முறையில் எனது அப்பாவின் இறுதி சடங்கை செய்ய நீங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

TNPSC Group 4 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறதா?? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

இந்நிலையில் அஜித்தின் தந்தை தமிழனா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் ஒரு வீடியோவை ட்ரெண்டாக்கி வருகின்றனர். அந்த வீடியோவில் நடிகர் அஜித், எனது தந்தை தமிழன் தான். அவர் சென்னை காரர் தான். என்னுடைய அம்மா தான் வட இந்தியாவை சேர்ந்தவர்கள் என்று கூறியிருப்பார். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here