தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சக்க போடு போட்டது. தற்போது இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இது குறித்து அண்மையில் தான் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங் இந்த மாத இறுதியில் ஆரம்பிக்க இருப்பதாக இணையத்தில் செய்திகள் பரவி வந்தது. அதுமட்டுமின்றி இந்த படத்திற்காக அஜித் தன்னை தயார் படுத்தி வருவதாகவும் கூட செய்திகள் வெளியாகின.
ஆனால் தற்போது அஜித்தை நினைத்து அவரது ரசிகர்கள் புலம்பி வருகிறார்களாம். அதாவது சமீபத்தில் அஜித் தனது ரசிகர் ஒருவருடன் போட்டோ எடுத்து கொண்டார். அந்த புகைப்படத்தை ரசிகர் சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் ஸ்டார்ட்டாக இருக்கும் நிலையில் அஜித் இன்னும் உடல் எடையை குறைக்காமல் இருக்கிறாரே என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.