ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.., மனுஷன் வர வர Handsome ஆகிட்டே போறாரு .., கொண்டாடும் ரசிகர்கள்!!

0
நடிப்புல தான் இமயம்னு பார்த்தா குணத்துலையும் இப்படி இருக்கீங்களே அஜித்.., என்ன செஞ்சு இருக்காருன்னு பாருங்களே!!
நடிப்புல தான் இமயம்னு பார்த்தா குணத்துலையும் இப்படி இருக்கீங்களே அஜித்.., என்ன செஞ்சு இருக்காருன்னு பாருங்களே!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் அஜித்குமார்:

கோலிவுட்டில் மாஸ் காட்டும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் நடிக்கும் படத்திற்கு கிடைக்கும் வரவேற்புக்கு ஈடு இணையே இல்லை. மேலும் வருடத்திற்கு ஒரு படம் கொடுத்தாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வருகிறார். ஆனால் கடைசியில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இருந்தாலும் படத்தின் வசூல் அமோகமாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நடிகர் அஜித்தின் ஏகே 61 படத்தை வலிமை படத்தை இயக்கிய வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தை குறித்து எந்தவித அப்டேட் வெளியாகாமல் ஏக்கத்தில் ரசிகர்கள் இருந்து வந்த நிலையில் அவர்களை குஷி படுத்தும் விதமாக ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது. மேலும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தல அஜித்தின் லேட்டஸ்ட் மாஸ் லுக் புகைப்படம் இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது. இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இது அடுத்த படத்தோட லுக்கா இருக்குமோனு ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here