2022 இல் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த நடிகர் அஜித் – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

0

சமீபத்தில் வெளியாக இருந்த வலிமை திரைப்படம் தள்ளி போன விரக்தியில் இருந்த நடிகர் அஜித் குமாரின் ரசிகர்களுக்கு ஒரு புதிய அப்டேட் ஒன்றை படக்குழு அறிவித்துள்ளது.

வலிமை:

நேர் கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார், ஹியூமா குரேஷி மற்றும் தெலுங்கு வில்லன் நடிகர் கார்த்திகேயா ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் வலிமை. மேலும் இந்த படம் பொங்கலுக்கு விருந்தாக வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக தமிழக அரசு திரையரங்குகளில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி அளித்து உள்ளது. அதனால் படக்குழு பட வெளியிடை தள்ளி வைத்து விட்டது. இதனால் ரசிகர்கள் அனைவரும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

இந்த நிலையில் அவர்களுக்கு உற்சாகத்தை தரும் விதமாக நடிகர் அஜித்குமாரின் அடுத்த படமான ஏகே 61 படம் குறித்த அறிவிப்பு வெளியாகி வைரலானது. இந்தத் திரைப்படத்தையும் வலிமை திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் இயக்க உள்ளார். போனி கபூர் தயாரிக்கிறார். வலிமை படத்தை போன்று இந்த படத்தை இழுக்காமல் வெகு விரைவில் படத்தை முடிக்க திட்டம் தீட்டி உள்ளனர். மேலும் இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு கூறியுள்ளது. தொடர்ந்து இந்த வருடமே நடிகர் அஜித் குமாருக்கு இரண்டு படங்கள் வெளியாக உள்ளது. அதனால் அவரின் ரசிகர்கள் கொண்டாட தயாராக உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here