அஜித்தின் துணிவு படத்துக்காக 12ம் வகுப்பு மாணவி மரணம்.., அதிர்ச்சியில் படக்குழுவினர்!!

0
அஜித்தின் துணிவு படத்துக்காக 12ம் வகுப்பு மாணவி மரணம்.., அதிர்ச்சியில் படக்குழுவினர்!!
அஜித்தின் துணிவு படத்துக்காக 12ம் வகுப்பு மாணவி மரணம்.., அதிர்ச்சியில் படக்குழுவினர்!!

நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு திரைப்படத்திற்காக மீண்டும் ஒரு நபர் இறந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

துணிவு திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மன்றமே இல்லாமல் பல கோடி ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளவர் தான் நடிகர் அஜித்குமார். சமீபத்தில் இவர் நடித்த துணிவு திரைப்படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் உலக அளவில் 150 கோடி அள்ளி வசூல் சாதனை படைத்து வருகிறது. இப்படி வசூலை வாரி குவித்து வரும் துணிவு திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாட முடியாத அளவுக்கு, தொடர்ந்து சோகமான செய்திகள் வெளியாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த திரைப்படம் வெளியான முதல் நாள் முதல் ஷோவில் பரத் என்ற இளைஞன் லாரியில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து திரைப்படத்தை பார்க்க தியேட்டரில் உள்ளே விடாததால் ஒரு நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இப்படி துணிவு படத்திற்காக இரண்டு உயிர்கள் போன நிலையில், தற்போது மீண்டும் ஒரு நபர் இறந்து விட்டதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ஹிட் சீரியல் நடிகை.., அதுவும் அதே சேனலிலா??

அதாவது நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் கும்பகோணத்தை சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி துணிவு படத்தை பார்க்க ஆசைப்பட்டுள்ளார். அதனால் தன் குடும்பத்தினரிடம் அழைத்துச் செல்லும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால் குடும்பத்தினர் அந்த மாணவியை தேர்வுக்கு படிக்க சொல்லிவிட்டு, குடும்பத்தினர் மட்டும் படத்திற்கு சென்றுள்ளனர். இதனால் சோகமான அந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here