AK 62 வரலைனா என்ன.., ரசிகர்களுக்காக அந்த படத்தை இறக்க முடிவெடுத்த படக்குழு – சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் அஜித்!!

0
AK 62 வரலைனா என்ன.., ரசிகர்களுக்காக அந்த படத்தை இறக்க முடிவெடுத்த படக்குழு - சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் அஜித்!!
AK 62 வரலைனா என்ன.., ரசிகர்களுக்காக அந்த படத்தை இறக்க முடிவெடுத்த படக்குழு - சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் அஜித்!!

நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாள் அன்று அவர் நடிப்புக்கு தொடக்க புள்ளியாக இருந்த அமராவதி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்குமார்:

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் மன்னனாக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். விளம்பரத்தில் நடிக்க தொடங்கிய இவர் பட வாய்ப்பு கேட்டு ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கியுள்ளார். ஒரு பக்கம் பைக் ரேஸிலும் கலந்து கொண்டு வந்தார். அதன் பின்னர் தான் இவருக்கு அமராவதி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தை செல்வா இயக்க நடிகை சங்கவி அவருக்கு ஜோடியாக நடித்தார்.

இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மேலும் அவரின் சினிமா கேரியருக்கு பிள்ளையார் சுழியாக அமைந்தது. அந்த வெற்றியை விடாமல் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கொடுக்க வேண்டும் என்று உடல் ரீதியாலும் மன ரீதியாலும் கஷ்டங்கள் வந்தாலும் அதனை ஏற்று நடித்து இந்த அளவுக்கு உயர்ந்துள்ளார். மேலும் இவர் அடுத்து நடிக்க இருக்கும் ஏகே 62 திரைப்படம் இந்த வருடம் வெளியாவதற்கு கஷ்டம் என்று கூறி வரும் நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

 

அதாவது நடிகர் அஜித்தின் முதல் படமான அமராவதி படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கன்வெர்ட் செய்து, அவரின் பிறந்தநாளான( மே 1ம் தேதி) ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் இந்த வருடம் அஜித் படம் ரிலீசானால் போதும் எந்த படமாக இருந்த என்ன என்று சந்தோஷத்தை கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here