விக்கியை தொடர்ந்து அஜித் படத்திலிருந்து ஜகா வாங்கிய கார்த்தி பட இயக்குனர்.., அப்ப AK 62 ட்ராப் தானா?

0
விக்கியை தொடர்ந்து அஜித் படத்திலிருந்து ஜகா வாங்கிய கார்த்தி பட இயக்குனர்.., அப்ப AK 62 ட்ராப் தானா?
விக்கியை தொடர்ந்து அஜித் படத்திலிருந்து ஜகா வாங்கிய கார்த்தி பட இயக்குனர்.., அப்ப AK 62 ட்ராப் தானா?

அஜித் நடித்த துணிவு திரைப்படம் வெளியாகி வசூலை அள்ளிய நிலையில், அடுத்து நடிக்க இருக்கும் ஏகே 62 படத்தை குறித்து இணையத்தில் முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது.

ஏகே62:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ரசிகர் மன்றமே இல்லாமல் பல கோடி ரசிகர்களை கட்டுக்குள் வைத்திருப்பவர் தான் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வசூலில் நல்லா கல்லா கட்டியது. இப்படம் வெளியாகி 26 நாட்கள் கடந்த நிலையில், இதுவரை 220 கோடிக்கு மேல் வசூல் அள்ளியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் இயக்கத்தில் ஏகே 62 உருவாக இருந்த நிலையில், லைக்கா நிறுவனத்திற்கு விக்கி கதை பிடிக்காததால் அவரை ஏகே 62 வில் இருந்து நீக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி, பி.எஸ். மித்ரன் இருவரில் ஒருவர் இயக்க இருப்பதாக இணையத்தில் தகவல் கசிந்தது.

சந்தானத்துக்கு ஜோடியாக களமிறங்கும் தனுஷ் பட நடிகை.., “வடக்குப்பட்டி ராமசாமி” லேட்டஸ்ட் அப்டேட் வெளியீடு!!

அதாவது அஜித்குமார் நடிக்க இருக்கும் ஏகே 62 படத்தை நான் இயக்கவில்லை என்று பி.எஸ். மித்ரன் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த சர்தார் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில், தற்போது பி.எஸ். மித்ரன் சர்தார் 2 படத்தில் பிஸியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அஜித்தின் ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி கைக்கு தான் செல்லும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here