பக்தி பரவசத்தில் மூழ்கிய நடிகர் அஜித் – பட்டு வேட்டியில் மாஸ் காட்டும் AK! வைரலாகும் போட்டோஸ்!!

0
பக்தி பரவசத்தில் மூழ்கிய நடிகர் அஜித் - பட்டு வேட்டியில் மாஸ் காட்டும் AK ! வைரலாகும் போட்டோஸ்!!
பக்தி பரவசத்தில் மூழ்கிய நடிகர் அஜித் - பட்டு வேட்டியில் மாஸ் காட்டும் AK ! வைரலாகும் போட்டோஸ்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித், கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ:

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் நடிப்பில் உருவான வலிமை திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி வசூலை வாரி குவித்தது. 200 கோடிக்கு மேல், வசூல் செய்து இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் சாதனையில் இணைந்தது. இந்த படத்தை அடுத்து, நடிகர் அஜித் தனது 61வது படத்திற்கு அதிரடியாக தயாராகி வருகிறார். இரண்டு வேடங்களில் நடிக்கும் இவர், இந்த படத்திற்காக தாடி, மீசை என மிரட்டல் கெட்டப்புக்கு மாறியுள்ளார்.

இந்த படத்திற்கு பிறகு, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடிக்க உள்ளதாக அண்மையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், நடிகர் அஜித் கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வேட்டியில் சென்றுள்ளார். பக்தி பரவசத்தில் மூழ்கியிருக்கும் இவர் குறித்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here