தமிழ் சினிமா ரசிகர்கள் தல என அழைக்கப்படும் நடிகர் அஜித் மருத்துவமனை ஒன்றில் இருந்து மாஸ்க் அணிந்தவாறு வெளிவரும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எதற்காக இது என தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர்.
நடிகர் அஜித்:
தமிழ் சினிமாவில் தனக்கென தனி வழியில், ரசிகர்களால் அதிகளவில் கொண்டாடப்படும் நடிகராக திகழ்பவர் அஜித்குமார். தற்போது வலிமை படத்தில் அஜித் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பின் பைக் சேசிங் காட்சியின் பொழுது நடிகர் அஜித் கீழே விழுந்து அடிபட்டதாக வைரலாக பரவிய வீடியோவால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். தற்போது கொரோனா காரணமாக ஷூட்டிங் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. இதனால் நீண்ட காலமாக நடிகர் அஜித்தை ரசிகர்கள் பார்க்கவில்லை. தற்போது மாஸ்க் அணிந்தபடி மருத்துவமனையில் இருந்து அவர் வெளிவருவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் அஜித் ஏன் அங்கு சென்றார் என தெரியாமல் ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |