அஜித் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கம்…,நயன்தாரா சமரசம்…,இதென்னடா சோதனை!!

0

நடிகர் அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் நயன்தாரா சமரசம் செய்ய முயன்றதாக கூறப்பட்டுள்ளது.

அஜித் 62 திரைப்படம்

நடிகர் அஜித் நடித்து பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்த ‘துணிவு’ திரைப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இதை தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் அஜித் 62 திரைப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாக சில தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியான வண்ணம் இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆண் குழந்தைக்கு அப்பாவான இயக்குனர் அட்லி…,குவியும் வாழ்த்துக்கள்…,

அதே நேரத்தில், அஜித்தின் புதிய திரைப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குவதாக புதிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது, விக்னேஷ் சிவனின் கதை லைகா தயாரிப்பு நிறுவனத்துக்கு பிடிக்கவில்லை என்பதால் இயக்குனரை மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் மனைவி நடிகை நயன்தாரா சமரசம் செய்ய முயன்றதாகவும், அதனை தயாரிப்பு நிறுவனம் மறுத்ததாகவும் சில தகவல்கள் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here