Bathroom-ல் இறந்து கிடந்த இளம் நடிகர்..,இப்படி கூட சாவு வருமா? சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

0
Bathroom-ல் இறந்து கிடந்த இளம் நடிகர்..,இப்படி கூட சாவு வருமா? சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

பாலிவுட்டில் பிரபல இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் ஆதித்யா சிங் ராஜ்புத். இவர் , ‘கிராந்திவீர்’ மற்றும் ’மைனே காந்தி கோ நஹி மாரா’ போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் சுமார் 300 விளம்பரங்களிலும் நடித்துள்ள இவர் பல சீரியல்களிலும் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் ஆதித்யா சிங் அவருடைய வீட்டின் கழிவறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார் என்ற தகவல் ஒட்டுமொத்த பாலிவுட்டை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அதாவது இவர் மும்பை நகரில் முக்கிய பகுதியான அந்தேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 11-வது மாடியில் வசித்து வந்துள்ளார்.

அனல் பறக்க காத்திருக்கும் CSK vs GT ஆட்டம்…, இணையத்தில் வைரலாகும் போஸ்டர்கள்!!

நேற்று நண்பர்களுடன் வெளியே சென்று வீட்டுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று அவர் கழிவறையில் இறந்து கிடந்துள்ளார். அவர் இறந்து கிடந்ததை பார்த்த பணிப்பெண் ஒருவர் காவல்துறைக்கு தெரிவித்தார். இதையடுத்து ஆதித்யா சிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதிக அளவில் போதை பொருள் எடுத்து கொண்டதில் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here