
தமிழகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வசதிக்காக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு இந்த அரையாண்டுக்கான வரியை செலுத்த அறிவுறுத்தி உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் நுகர்வோர்கள் இந்த வரிகளை செலுத்த ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற இணையத்தளத்தில் சென்று டெபிட் கார்டு, UPI உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலமாக செலுத்த அறிவுறுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து இதற்கான கால அவகாசம் மார்ச் 31ம் தேதிக்குள் முடிவடைய உள்ளதால் அனைத்து பகுதிகளிலும் உள்ள பணிமனை அலுவலகங்கள் சனி, ஞாயிறு உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் செயல்படும் என தெரிவித்துள்ளனர்.
மதுரையில் இந்த முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்., முன்னேற்றம் அடைந்து வருவதாக தகவல்!!!
இதன்மூலம் இந்த குறைந்த கால அவகாசத்தில் நுகர்வோர்கள் சிரமமின்றி குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரிகளை செலுத்தலாம். அப்படி வரிகளை செலுத்த தவறும் பட்சத்தில் நுகர்வோருக்கான இணைப்புகள் துண்டிக்கப்பட்டு சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.