பண்டிகை அதுவுமா தாறுமாறாக உயரும் வெங்காய விலை.., மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!!!

0

நாடு முழுவதும் தற்போது தக்காளியின் விலை ஏற்றத்தை தொடர்ந்து வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதுவும் தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டே வருவதால் வெங்காயத்தின் விலை எப்போது குறையும் என மக்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த வெங்காயத்தின் விலை ஏற்றத்தால் நடுத்தர மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

அதாவது அதிகரித்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய பண்டகசாலை, மாநில கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களால் இயக்கப்படும் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வண்டிகள் மூலம் ஒரு கிலோ வெங்காயத்தை 25 ரூபாய்க்கு விற்க ஏற்பாடு செய்துள்ளனர். மத்திய அரசின் இந்த முடிவால் நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here