தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக அரசு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
அதே போன்று மற்ற வகுப்புகளுக்கு மதிய உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தினமும் சத்துணவு தரமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களுக்கு தினமும் குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அனுப்ப வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.