முதல்வர் உத்தரவை மீறி திறக்கப்பட்ட பள்ளி., கல்வித்துறை இயக்குனர் அதிரடி நடவடிக்கை!!!

0
முதல்வர் உத்தரவை மீறி திறக்கப்பட்ட பள்ளி., கல்வித்துறை இயக்குனர் அதிரடி நடவடிக்கை!!!

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் அவதியுற்று வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியும், 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவித்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதைத்தொடர்ந்து புதுச்சேரி மாநில பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவிப்பை வெளியிட்டார். ஆனாலும் புதுவை மரப்பாலம் அருகே உள்ள மதர் தெரசா பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தது. இது தொடர்பாக பெற்றோர் மற்றும் மாணவர் சங்க நிர்வாகிகள் கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமியிடம் புகார் தெரிவித்தனர்.

மீனாவின் அந்த விஷயத்தை பற்றி அரங்கத்தில் உடைத்த ராஜ்கிரண்.., அடடே இப்படி ஒரு கதை இருக்கா??

இதையறிந்து மதர் தெரசா பள்ளிக்கு விரைந்து வந்த கல்வி இணை இயக்குனர், முதல்வர் உத்தரவை மீறி அரசு விடுமுறையில் பள்ளி திறக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததோடு நோட்டீஸ் வழங்கி மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இதனால் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கல்வி இணை இயக்குனருக்கு நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here