ஆக்ஷன் கிங் நடிகர் மீது பாலியல் புகார் அளித்த பிரபல நடிகை – நேரில் ஆஜராக போலீஸ் உத்தரவு!!

0

நிபுணன் படத்தில் நடித்தபோது  நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாருக்கு போலீசார் படக்குழுவை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளனர்.

முக்கிய புகார்:

திரைப்பிரபலங்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிக்க கடந்த சில நாட்களுக்கு முன் மீடூ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.  இதனை அடுத்து, பிரபல பாடகியான சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றம் சுமத்தினார்.  இதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாக வைரமுத்துவும் அறிவித்தார்.

இவரைத் தொடர்ந்து நடிகர் ராதாரவி, நடன இயக்குநர் கல்யாண், பிரபல பாடகர் கார்த்திக், இயக்குனர் சுசி கணேசன் என பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. இந்த நிலையில், தமிழ் திரை உலகத்தில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ள ஆக்ஷன் கிங் அர்ஜுன் மீது பாலியல் குற்றம் பாய்ந்துள்ளது. நிபுணன் படத்தில் நடித்தபோது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் குற்றம் சுமத்தினார்.

இது குறித்து நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கடந்த 2018-ஆம் ஆண்டு அளித்த புகாரின் அடிப்படையில், பெங்களூரு கப்பன் பார்க் போலீசார் நடிகர் அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த புகாருக்கு இதுவரை நடிகர் அர்ஜூன் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்படவில்லை.  இதனை அடுத்து, புகார் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி  படக்குழுவினருக்கு பல முறை காவல் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அவர்கள் ஆஜராகாத நிலையில், மீண்டும் நிபுணன் படத்தின் தயாரிப்பாளர் ஜெயராம், இயக்குனர் அருண், அரவிந்த் உள்ளிட்டோரை விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  பிரபல நடிகரின் மீதான இந்த பாலியல் குற்றச்சாட்டு சினிமா வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here