தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கான நடவடிக்கை பற்றிய முழு விளக்கம்., முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை!!!

0
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கான நடவடிக்கை பற்றிய முழு விளக்கம்., முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை!!!
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கான நடவடிக்கை பற்றிய முழு விளக்கம்., முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை!!!

12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு வருகை தராத மாணவர்களுக்கு என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிவகுத்துள்ளார்.

பொதுத்தேர்வு:

தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு 3,225 மையங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடத்தை தொடர்ந்து பிரதான பாட தேர்வுகளிலும் 45,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருந்தது. இது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் இதுகுறித்த நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக வழங்கி உள்ளார். அதன்படி “பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதாத 47,943 மாணவர்களில் 40,593 பேர் 11ம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்கள். ஆப்சென்ட் ஆன மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் உதவியுடன் கண்டறிந்து தேர்வு பயத்தை போக்கும் வகையில் பயிற்சிகளை வழங்க வேண்டும். பின்னர் ஆட்சியர்களின் ஒத்துழைப்புடன் உடனடியாக துணைத் தேர்வு எழுதவும் இதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ஏற்பட்ட விபரீதம்.., போலீசில் புகார்!! காவல்துறை தீவிர நடவடிக்கை!!

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வது மட்டும் என்னுடைய வேலை இல்லை. கொரோனா காலத்திற்கு முன்பு இருந்த பள்ளிக்கல்வித்துறையில் தற்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலை எதிர்காலத்தில் இனி வரக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதனால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்ற வேண்டும். அதேபோல் இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு வரவழைக்க வேண்டும்.” என அறிவுறுத்தியுள்ளார். எனவே இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இவர்களுக்கான பயிற்சி வகுப்பு, மறுதேர்வு உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here