
இமாச்சல பிரதேச பட்ஜெட் தாக்கலில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான திட்டங்களை அறிவித்து விட்டு மதுபிரியர்களுக்கு அதிர்ச்சிகரமான திட்டத்தையும் அம்மாநில முதல்வர் தெரிவித்து உள்ளார்.
பட்ஜெட் தாக்கல்:
இந்தியாவில் மத்திய அரசை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலை செய்து வருகின்றனர். அந்த வகையில் இமாச்சல பிரதேசத்தில் 2023-24 ம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை முதலமைச்சர் சுக்விந்தர் சிங் இன்று தாக்கல் செய்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதில் பெரும்பாலான மாநிலங்களில் அரசு ஊழியர்களின் தலையாய கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளார். இதனால் மாநிலத்தில் உள்ள 1.36 லட்ச அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் பசுமாடுகளை பராமரிப்பதற்காக சரணாலயம் அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உலக தூக்க தினம்.., பணியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நிறுவனம்.., இத நாங்க எதிர்பாக்கல!!!
இதனால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 100 கோடி வரை நிதி பற்றாக்குறை ஏற்படும். இதனை சமாளிக்க ஒவ்வொரு மதுபான பாட்டில்களுக்கும் கூடுதலாக ரூ.10 பசு செஸ் வரி வசூல் செய்யப்படும். ஏற்கனவே பசு செஸ் வரி ரூ.2 உயர்த்திய நிலையில் தற்போது ரூ.10 வரை உயர்த்தியுள்ளதால் மதுபிரியர்கள் பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.