மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த் – ரசிகர்கள் வேண்டுதல்

0
ரஜினி வீட்டில் குவிந்த ரசிகர்கள் பட்டாளம்.., கடைசியில் லதா செய்த காரியம்!!
ரஜினி வீட்டில் குவிந்த ரசிகர்கள் பட்டாளம்.., கடைசியில் லதா செய்த காரியம்!!

ரஜினிகாந்த் விரைவில் அமெரிக்கா செல்லப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக அங்கு செல்ல போவதாகவும், சிகிச்சை முடிந்த பின் சிறிது நாட்கள் ஓய்வெடுக்க போவதாகவும் திட்டமிட்டுள்ளார்.

ரஜினிகாந்த்:

தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்திசுரேஷ், மீனா என பெரும் பட்டாளமே நடிக்கும் திரைப்படம் தான் அண்ணாத்த திரைப்படம். இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இந்த படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிய தலைவர் ரஜினி காந்த் அவர்களின் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகியது.

தற்போது ரஜினிகாந்த் விரைவில் அமெரிக்கா செல்லப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக அங்கு செல்ல போவதாகவும், சிகிச்சை முடிந்த பின் சிறிது நாட்கள் ஓய்வெடுக்க போவதாகவும் திட்டமிட்டுள்ளார். இது குறித்து மத்திய அமைச்சர்களிடம் அனுமதிக்காக பேசியுள்ளார் ரஜினி உடனே ஒப்புதலை அரசு வழங்கி விட்டதாம். இந்திய அரசிடம் தனி விமானத்தில் 14 பேர் பயணம் செய்வது போன்ற அனுமதியைப் பெற்றுள்ளது தெரியவந்தது.

அரசியல் குறித்து இவர் மீது இவர்மீது பல்வேறு தரப்பு விமர்சனங்கள் வந்தபோதிலும் இவருக்காக பல கோடி ரசிகர்கள் ஆதரவாக இருந்தார்கள். அப்படி ஒரு ரசிகர் படையை அமைத்த ரஜினிகாந்த் அவர்கள் நலமுடன் திரும்பி வர ரசிகர்கள் வேண்டுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here