அதானி நிறுவன பங்குகள் திடீர் வீழ்ச்சி – விலை சரிவுக்கு காரணம் என்ன?

0

இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான கெளதம் அதானியுடைய நிறுவனங்களின் பங்குகள் கடந்த சில வருடங்களாக லாபத்தை அள்ளிக்கொடுக்கும் வகையில் வியக்கவைத்துக் கொண்டிருந்தன. இந்நிலையில், அதானி குழும பங்குகள் இன்று இந்தியப் பங்குசந்தைகளில் திடீர் சறுக்கலை சந்தித்தன.

விலை சரிவுக்கு காரணம் என்ன:

தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 50 0.08% (12.5 புள்ளிகள்) ஏற்றம் கண்டு 15,811 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. ஆனால் அதானி குழும நிறுவன பங்குகள், இந்த சந்தை சூழலுக்கு பொருந்திப் போகாமல் கொஞ்சம் அதிகமாகவே விலை வீழ்ச்சி கண்டிருக்கின்றன.

இந்திய பங்குச் சந்தைகளில் கெளதம் அதானிக்குச் சொந்தமான அதானி குழுமத்தின் ஆறு நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன.ஆறு பங்குகளில், அதானி க்ரீன் எனர்ஜி மட்டுமே 0.68% விலை அதிகரித்து 1,226 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. உடனடியாக இந்தியப் பங்குசந்தைகளில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகளின் விலை சரிந்தது. பல்வேறு அதானி நிறுவனங்களின் பங்குகளின் விலை 5 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை வீழ்ச்சி அடைந்தன.

இந்த வீழ்ச்சி அதானி போர்ட்ஸ், அதானி ட்ரான்ஸ்மிஷஸின், அதானி பவர், அதானி என்டர்ப்ரிஸ்பேஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை பாதித்தது. அதானி குழுமம் இன்று பங்குசந்தையில் கடும் வீழ்ச்சியை சந்தித்ததால் ஒரு மணி நேரத்தில் சுமார் 73,250 கோடியை இழந்ததுள்ளார். இந்நிலையில் NSDL அமைப்பு அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட் மற்றும் ஏபிஎம்எஸ் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகிய நிறுவனங்களின் FPI கணக்கை மே 31ஆம் தேதியன்று முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தத் தகவல் தற்போது தான் வெளியாகி முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here