ஜேஇஇ தேர்வு எழுத 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும் – மத்திய அரசு தகவல்..!

0

ஜேஇஇ தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் போதும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ஜேஇஇ தேர்வு எழுத தளர்வு..!

இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் அதாவது ஐஐடி-க்களில் மாணவர்கள் படிக்க வேண்டுமெனில் கூட்டு சேர்க்கை வாரியம் எனப்படும் ஜேஇஇ நடத்தும் மேம்படுத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்று முதல் 20 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது 12ம் வகுப்புப் பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருப்பது போதுமானது என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஊழியர்களை ஊதியமின்றி 5 ஆண்டுகள் வரை கட்டாய விடுப்பில் அனுப்ப ஏர் இந்தியா முடிவு..!

இந்நிலையில், ஐஐடி மாணவர்கள் சேர்க்கைக்கான விதிமுறைகளை இந்த ஆண்டில் ஜேஇஇ தளர்த்தியுள்ளது. ஜேஇஇ மேம்படுத்தப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறும் தகுதிவாய்ந்த மாணவர்கள், 12ம் வகுப்பில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் பிரச்சினையில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. மாணவர்கள் ஜேஇஇ தேர்வு எழுதுவதற்கு 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் போதும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், 12ம் வகுப்பில் 75 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here