ஏர் கண்டிஷனர்களின் இறக்குமதிக்கு தடை – மத்திய அரசு அதிரடி!!

0

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியைக் குறைக்கும் முயற்சியில், மத்திய அரசு இறங்கி உள்ளது. அதில் ஒன்றாக ஏர் கண்டிஷனர்கள் (ஏசி) இறக்குமதிக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஏர் கண்டிஷனர்கள்:

பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்த ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குளிரூட்டும் வசதியுடன் கூடிய ஏர் கண்டிஷனர்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலின் ஒப்புதலுடன் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் திருவிழா சீசன் துவங்குவதற்கு சற்று முன்னதாகவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

ஊரடங்கு காலத்தில் 25 லட்சம் வழக்குகள் ஆன்லைனில் விசாரணை – சட்டத்துறை அமைச்சர் தகவல்!!

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், இந்தியாவில் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி குறித்து சோதனை செய்யப்பட்டு டயர்கள், பல்வேறு வண்ண தொலைக்காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஆகஸ்ட் மாதம், இந்தியாவில் சுமார் 101 விதமான ராணுவ தளவாடங்கள் உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டது. இதில் பாதுகாப்பு ஹெலிகாப்டர்கள், துப்பாக்கிகள், போக்குவரத்து விமானங்கள், கவச வாகனங்கள் போன்றவை அடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here