18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி – இமாச்சல் அரசின் சாதனை: மோடி புகழாரம்!

0

இமாச்சல் மாநிலத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளது என்ற வரலாற்று சாதனை நடந்துள்ளது.

முதல் மாநிலம்:

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசுக்கு எதிரான ஆயுதமாக தடுப்பூசி மட்டுமே இருந்து வருகிறது.  இதில், உலகில் கோவாசின் மற்றும் கோவிஷில்டு தடுப்பூசியும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசியும், அமெரிக்காவின் மடர்னா மற்றும் ஸ்பைசர் போன்ற தடுப்பூசிகளும் தற்போது வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த தடுப்பூசிகள் போக குழந்தைகளுக்கு என்று தனியாக ஒரு தடுப்பூசி கண்டறியும் ஆய்வு நடந்து வருகிறது. இந்த நிலையில் மாநிலங்கள் தோறும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  அதற்காக மத்திய அரசிடம் தடுப்பூசி வழங்குதலை அதிகப்படுத்தும் படி மாநில அரசுகள் கோரிக்கை வைத்தன.

37 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு!!!

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு மத்திய அரசு மாநிலங்களுக்கான தடுப்பூசி வழங்குதலை அதிகப்படுத்தியது.  இதனால் விரைவில் இந்த தொற்றை தடுக்கும் விதமாக அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்தது. இதனை அடுத்து, நாட்டில் இமாச்சல் பிரதேசம் முதல் முறையாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளது.

இது குறித்து காணொளியில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, சில நாட்களுக்கு முன்பு வரை இமாச்சல் பிரதேசத்தில் மருத்துவ உள்கட்டமைப்புகள் சிறந்த அளவில் இல்லை. ஆனால் தற்போது அம்மாநிலம் தடுப்பூசியில் புதிய சாதனையை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here