“நினைத்த இடத்தில் அடிக்கிறாருப்பா”…, இந்தியாவின் கத்துக்குட்டியை பாராட்டிய ஏபி டி வில்லியர்ஸ்!!

0
"நினைத்த இடத்தில் அடிக்கிறாருப்பா"..., இந்தியாவின் கத்துக்குட்டியை பாராட்டிய ஏபி டி வில்லியர்ஸ்!!

குஜராத் அணிக்கு எதிராக, சதம் விளாசிய சூர்யகுமார் யாதவை 360 டிகிரி நாயகனான ஏபி டி வில்லியர்ஸ் வெகுவாக பாராட்டி உள்ளார்.

சூர்யகுமார் யாதவ்:

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியானது பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யகுமாரின் அதிரடியால் 218 ரன்களை குவித்திருந்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணி, 191 ரன்கள் மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த போட்டியில், சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில், 11 பவுண்டரி 6 சிக்ஸர் உட்பட 103* ரன்கள் அடித்து தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். ஐசிசியின் நம்பர் 1. டி20 பேட்ஸ்மேனாக திகழும் இவரை, இந்தியாவின் ஏபி டி வில்லியர்ஸ் என்று செல்லமாக அழைப்பார். இதற்கு காரணம், எதிரணியின் பந்து வீச்சை மைதானத்தின் அனைத்து கோணத்திலும் சிதறடிப்பதில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஏபி டி வில்லியர்ஸ் திகழ்கிறார்.

மெட்ரோ ரயில் வழித்தடம் இந்த பகுதிகளில் இயங்காது?? ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!

இவரது, பாணியை போலவே சூர்யகுமார் செயல்படுவதால் 360 டிகிரி நாயகன் என்றும் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில், ஏபி டி வில்லியர்ஸ் குஜராத் அணிக்கு எதிராக சதம் அடித்த சூர்யகுமார் யாதவை வெகுவாக பாராட்டி உள்ளார். அதாவது, சூர்யகுமார் யாதவ் எவராலும் வீழ்த்த முடியாத வீரராகவும், அவர் நினைக்கும் இடத்தில் பந்தை கச்சிதமாக அடிக்கிறார். இதனை பார்ப்பதற்கு மிக மகிழ்ச்சியாக உள்ளதாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here