ஆவின் பால் கொள்முதல் 9 லட்சம் லிட்டர் குறைவு., 50 ஆண்டில் இல்லாத சரிவு! இனி இதான் நிலைமை!!

0
ஆவின் பால் கொள்முதல் 9 லட்சம் லிட்டர் குறைவு., 50 ஆண்டில் இல்லாத சரிவு! இனி இதான் நிலைமை!!
ஆவின் பால் கொள்முதல் 9 லட்சம் லிட்டர் குறைவு., 50 ஆண்டில் இல்லாத சரிவு! இனி இதான் நிலைமை!!

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல், 9 லட்சம் லிட்டர் வரை திடீரென சரிந்துள்ளது.

திடீர் சரிவு :

அரசின் ஆவின் நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்கள் பெரும்பாலான மக்களின் பால் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்த நிலையில், சமீப காலமாக பால் கொள்முதல் விலை உயர்த்தி தர வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள், ஆவின் நிறுவனத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் தற்போது வரை, இந்தக் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காத தால் பெரும்பாலான மக்கள் தனியார் கொள்முதல் நிலையங்களில் பாலை வழங்க ஆரம்பித்துவிட்டனர். இதனால், 36 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் கொள்முதல் அளவு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில், 9 லட்சம் லிட்டராக சரிந்து 27 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது.

தமிழகத்திற்கு குவியும் வளர்ச்சி திட்டம்., ரூ.43.20 கோடி செலவில் திட்டங்கள்! இதெல்லாம் மாற போகுதா?

இப்படியே போனால் ஆவின் நிர்வாகத்தின் நிலை, கவலைக்கிடமாக மாறிவிடும். எனவே, பசும் பாலுக்கு லிட்டருக்கு 20 ரூபாய் உயர்த்தி 55 ரூபாயாகவும், எருமை பாலுக்கு ரூபாய் 24 உயர்த்தி 68 ரூபாய் ஆகும் கொள்முதல் விலையை வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here