திருமணத்திற்கு தடல்புடலாக ரெடியாகும் ஆதி நிக்கி – கல்யாண தேதி அறிவிப்பு! வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

0
திருமணத்திற்கு தடல்புடலாக ரெடியாகும் ஆதி நிக்கி - கல்யாண தேதி அறிவிப்பு! வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!
திருமணத்திற்கு தடல்புடலாக ரெடியாகும் ஆதி நிக்கி - கல்யாண தேதி அறிவிப்பு! வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடிகளான, ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோரது திருமணம் வருகிற மே 18 ஆம் தேதி தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

திருமண தேதி:

தமிழில் மரகத நாணயம், மிருகம், யாகாவாராயினும் நாகாக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் ஆதி. இவர் நடிகை நிக்கி கல்ராணி உடன் இணைந்து, ஒரு சில படங்களில் நடித்தார். இதையடுத்து இருவரும் காதலிப்பதாக தகவல் வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, கடந்த சில தினங்களுக்கு முன் இருவருக்கும் இவர்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில், இவர்கள் திருமணம் வருகிற மே 18ஆம் தேதி ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அன்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தி முடிக்க, மணமக்கள் வீட்டார் திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here