
தமிழ் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், அரசியல் பிரமுகர் என பன்முக திறமையுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் ஆர்.கே.சுரேஷ். இவர் ஆருத்ரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த பொது மக்களின் 15 கோடியை மோசடி செய்த வழக்கில் ஆதாரத்துடன் சிக்கியிருந்தார். மேலும் போலீசார் கையில் பிடிபடாமல் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்.
Enewz Tamil WhatsApp Channel
இதனால் இவர் மீது சிபிஐ போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது. மேலும் இவர் மீது லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்கையில் இதுவரை துபாயில் இருந்து வந்த ஆர்.கே.சுரேஷ் டிசம்பர் 10 ஆம் தேதி இந்தியா திரும்புவதாக சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார். இதையொட்டி தன் மீது பிறப்பித்துள்ளது லுக் அவுட் நோட்டீசை திரும்ப பெரும் படி உயர் நீதிமன்றத்தில் ஆர்.கே.சுரேஷ் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களே ரெடியா இருங்க…, தீபாவளிக்கு முன் வெளியாக இருக்கும் மாஸ் அப்டேட்!!