ஆர்த்தி – கணேஷ் திருமணம் குறித்து வெளியான தகவல் – இந்த பிரபலம் வீட்டில் முதல் விருந்தாம்!!

0

தமிழ் சினிமாவில் காமெடி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் தான் ஆர்த்தி – கணேஷ் தம்பதியர்கள். பல படங்களில் சேர்ந்து நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றனர். தமிழ் சினிமா மட்டுமின்றி சின்னத்திரை சீரியலிலும் நடித்து தற்போது வரை பிசியாக இருக்கின்றனர். நடிகை ஆர்த்தி தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார்.

இதனை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் ஜோடி சீசன் 2 நிகழ்ச்சியில் ரியல் ஜோடியாக கணேஷ் – ஆர்த்தி கலந்து கொண்டு தனது நடன திறமையை காண்பித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வாரம் வெளியாக இருக்கும் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.

அதாவது ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்ட் வைத்து நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் இந்த வாரம் திருமண கான்செப்ட் வைத்து நடனமாடி தங்களது திருமணத்தை குறித்து பேசியுள்ளனர்.

இதில் ஆர்த்தி – கணேஷ் கூறியதாவது, குருவாயூரியில் நடந்தது எங்கள் திருமணம், எங்களது முகூர்த்த புடவை மற்றும் வேஷ்டி ஆகியவற்றை ரஜினிகாந்த் வாங்கி கொடுத்தார். மேலும் முதல் பரிசு விஜயகாந்திடம் கிடைத்ததாகவும், கமல் கால் மூலம் வாழ்த்து தெரிவித்ததாகவும் மட்டும் விஜய் வீட்டில் தான் எங்களது முதல் விருந்து என்று ப்ரோமோ வீடியோவில் கூறியுள்ளனர். தற்போது ரசிகர்கள் நீங்கள் ரொம்ப லக்கி என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here