கேப்டனே மீண்டும் கேப்டனா.., ஓய்வுக்கு பிறகு ஆரோன் ஃபின்ச் கூறிய தகவல்.., CA எடுக்க போகும் முடிவு என்ன?

0
கேப்டனே மீண்டும் கேப்டனா.., ஓய்வுக்கு பிறகு ஆரோன் ஃபின்ச் கூறிய தகவல்.., CA எடுக்க போகும் முடிவு என்ன?
கேப்டனே மீண்டும் கேப்டனா.., ஓய்வுக்கு பிறகு ஆரோன் ஃபின்ச் கூறிய தகவல்.., CA எடுக்க போகும் முடிவு என்ன?

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச், அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்பதை பற்றி கூறியுள்ளார்.

அடுத்த கேப்டன் யார்??

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் ஒரு நாள் தொடரின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஒரு நாள் தொடர்களில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். அவர் இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 145 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 17 சதங்கள் மற்றும் 30 அரைசதங்களுடன் 5041 ரன்கள் குவித்துள்ளார். அவர் ஓய்வை அறிவித்ததை அடுத்து ஆஸ்திரேலிய ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் யார் கேப்டன் ஆக செயல்படுவது என்ற கேள்வி எழுந்தது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இந்நிலையில் பேட்டி ஒன்றின் மூலம் ஓய்வு பெற்ற ஆரோன் ஃபின்ச் ஒரு நாள் தொடருக்கு இவரை கேப்டனாக நியமித்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார். அதன்படி ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக வரலாம் என அனைவரும் கூறினர். ஆனால் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இவரது கேப்டன்சி தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் டேவிட் வார்னர் கேப்டனாக களமிறங்குவார் என எதிர்பார்த்த நிலையில் அவருக்கும் அந்த வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகியது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்படும் பாட் கம்மின்ஸ் தான் ஒரு சிறந்த கேப்டனாக இருப்பார். எனவே ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் ஒருநாள் தொடருக்கான கேப்டனை நியமிப்பதில் இவரின் பெயரை தேர்வு செய்யலாம் என கூறியுள்ளார். மேலும் டெஸ்ட் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வரும் இவர் ஒருநாள் அணியையும் சிறப்பாக வழிநடத்துவார் என ஆரோன் ஃபின்ச் நம்பிக்கையாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here