ஆலியா மானஸாவின் புதிய கதாபாத்திரங்கள் – வைரலாகும் விடியோக்கள்!!!

0

விஜய் தொலைக்காட்சியில் தற்போது அனைவரும் விரும்பி பார்க்கும் ஒரு சீரியல் என்றால் அது, ராஜா ராணி 2 என்று தான் கூற வேண்டும். தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பாகம் முதல் சீசனை விட மிகவும் நன்றாகவே ஓடுகிறது என்று தான் கூற வேண்டும். கதாநாயகியாக வரும் சந்தியா ஒரு போலீஸ் அதிகாரியாக மாற வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், அவருக்கு திடீர் என்று திருமணம் நடைபெற்று விடுகிறது. இதில் தற்போது பிரபல நடிகை அலியா மனசா நடித்து வருகிறார். இவர் தற்போது தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அதில் அடுத்து இந்த சீரியலில் நடைபெற இருக்கும் எபிசோட் பற்றிய தகவலையும் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் அவர் சிவில் கான்ட்ராக்டர், இன்னொரு பக்கம் டாக்டர் மற்றும் டிராபிக் போலீஸ் வேடம் போட்டுள்ளார். இவை அனைத்தையும் பார்க்கும் போது பட்ஷா படத்தில் தலைவரின் வேறு வேறு விதமான கெட்அப் போலவே இருக்கின்றது என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here