
இன்றைய சினிமாவில் சூப்பர் ஹிட் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாபா, வேட்டையாடு விளையாடு படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வேட்டையாடு விளையாடு படத்தை தொடர்ந்து மீண்டும் உலக நாயகனின் இன்னொரு பேமஸான திரைப்படம் மறுஒளிபரப்புக்கு தயாராகி வருவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது உலக நாயகன் இரட்டை வேடத்தில் அசத்தி கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ஆளவந்தான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தை உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் அடுத்த மாதம் 8ம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய தாணு திட்டமிட்டுள்ளார். தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
புதுமைக்கு வித்திட்ட ஆளவந்தான்-ஐ வெளியிடுவதில் அளவில்லா ஆனந்தம் @ikamalhaasan @Suresh_Krissna #Aalavandhan pic.twitter.com/xrNEw5CPX9
— Kalaippuli S Thanu (@theVcreations) November 17, 2023