தமிழகம் முழுவதும் இன்று ஆடிப்பெருக்கு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் கஷ்டம் நீங்கி சகல செல்வமும் பெறுக பெண்கள் வீட்டில், கோவிலில் பல்வேறு பூஜைகள் செய்வது வழக்கம். ஆனால் இன்றைய நாளில் குறிப்பாக திருமணம் ஆன பெண்கள் இந்த விஷயத்தை செய்தால் அவர்களது வாழ்க்கை வாழ்நாள் முழுவதும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் அமையும். அதாவது திருமணமான பெண்களுக்கு திருமணம் முடிந்த 3 வது மாதம் தாலியுடன் லட்சுமி, காசு மணி ஆகியவற்றை சேர்த்து தாலி பெருக்கு விழா நடத்துவது வழக்கம்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஆனால் அன்றைய நாளில் இதுபோன்ற செய்யாமல் ஆடி 18 ல் தாலி பெருக்கு விழாவை நடத்தினால் அந்த வீட்டில் செல்வம் பெருகுவதோடு மட்டுமல்லாமல் புதுமண தம்பதிகளுக்கு நீண்ட ஆயுளும், சந்தோஷமும் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும். மேலும் திருமணம் ஆகாத பெண்கள் ஆடிப்பெருக்கு திருநாளில் அம்மன் கோவிலில் மஞ்சள் கயிறை தனக்குத் தானே கட்டிக் கொண்டு வேண்டினால் நிச்சயம் அடுத்த ஆடி மாதத்திற்குள் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
செல்போன் சார்ஜரால் பறிபோன 8 மாத கை குழந்தை.., கர்நாடகாவில் நடந்த துயர சம்பவம்!!