என்னடா நடக்குது இங்க….,’ஆதிபுருஷ்’ வெளியாகும் அரங்குகளில் அனுமனுக்கு காலி இடம்…..,

0
என்னடா நடக்குது இங்க....,'ஆதிபுருஷ்' வெளியாகும் அரங்குகளில் அனுமனுக்கு காலி இடம்.....,
என்னடா நடக்குது இங்க....,'ஆதிபுருஷ்' வெளியாகும் அரங்குகளில் அனுமனுக்கு காலி இடம்.....,

இயக்குனர் ஓம் ராவுத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தை கருவாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் நடிகர் பிரபாஸுடன் இணைந்து நடிகை கீர்த்தி சனான், சன்னி சிங், சோனல் சவுகான், சைஃப் அலி கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை டி-சீரிஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த படத்திற்கான படப்பிடிப்பு 2021 ஆம் ஆண்டில் முடிவடைந்தது. இந்திய சினிமாவில் சுமார் 500 கோடி என்ற மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் ஜூன் 16 அன்று திரையரங்குகளுக்கு வர இருக்கிறது.

நடிப்பு எல்லாம் ஒரு வேலையா…..,நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக்….,

இந்த நிலையில், பிரபாஸ் நடித்துள்ள ‘ஆதிபுருஷ்’ படம் வெளியாகும் அனைத்து திரையரங்குகளிலும் ஒவ்வொரு காட்சியின் போதும் அனுமனுக்கு ஒரு இருக்கை காலியாக விடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here