ஆதார் வைத்திருப்போர் கவனத்திற்கு – இன்றே கடைசி நாள்! இல்லைன்னா ரூ. 1000 அபராதம் கட்டாயம்!!

0

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளதால், விரைந்து அதை முடிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

முக்கிய கவனத்திற்கு:

பான் கார்டு ஏற்படும் நிரந்தர வருமான வரி கணக்கு அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டு, தற்போது மார்ச் 31ம் தேதியான இன்றுடன் நிறைவடைய உள்ளது. அதற்குள் இந்த செயல்முறையை முடிக்காவிட்டால், சம்பந்தப்பட்டவர்களின் பான் கார்டு செயலிழக்கம் செய்யப்படும் என்றும், 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் இந்த, செயல்முறையை முடிக்காவிட்டால் வங்கி சேவையை தொடர்ந்து பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று, பொதுத்துறை வங்கிகளும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.

  • வருமான வரித் துறையின் என்ற https://www.incometaxindiaefiling.gov.in/home அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்று, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை வைத்து இந்த செயல் முறையில் ஈசியாக செய்து விடலாம்.
  • மேலும் குறுந்தகவல் மூலமாக, ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு UIDPAN <12 இலக்க ஆதார் எண்> <10 இலக்க PAN எண்> என டைப் செய்து SMS அனுப்பியும் இதனை செய்து முடிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here