ஆதார் வைத்திருப்போர் கவனத்திற்கு – இது தான் கடைசி வாய்ப்பு! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0

ஆதாருடன் பான் எண்ணை, இணைப்பதற்கான காலக்கெடு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அபராதத்துடன் இதை இணைப்பதற்கான அறிவிப்பை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.

பயனர்கள் கவனத்திற்கு:

இந்தியாவில், தனி மனிதனின் முழு அடையாளமாக ஆதார் அட்டை இருந்து வருகிறது. இந்த ஆதாருடன், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை இணைப்பது அவசியம் என மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இதற்கான காலக்கெடு மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து அபராதத்துடன் கூடிய ஆதார் எண் இணைப்பு, குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 1 2022 தேதியிலிருந்து ஜூன் 30 2002 வரை, ஆதார் கார்டுடன் பான் எண்ணை இணைப்பதற்கு ரூ. 500 அபராதமும், மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்த செயல்முறையை செய்தால் ரூ.1000 அபராதமும் வசூலிக்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

 மேலும் இதற்கான செயல்முறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

  1. முதலில் வருமான வரித்துறையின், http://www.incometax.gov.in என்ற அதிகாரப்பூர்வ தளத்துக்கு செல்ல வேண்டும்.
  2. இங்கு கொடுக்கப்பட்டுள்ள, quick links என்ற ஆப்ஷனில் Link Aadhaar என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  3. அடுத்ததாக, திரையில் தெரியும் பான் நம்பர், ஆதார் எண், பெயர், மொபைல் நம்பர் போன்றவற்றை உள்ளிட வேண்டும்.
  4. விவரங்களை பூர்த்தி செய்த பின், ‘I validate my Aadhaar details’ என்பதை கிளிக் செய்து Continue என்பதை  தொட வேண்டும்.
  5. பின், பதிவிடப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி நம்பரை உள்ளிட்டு Validate என்பதை கொடுக்க வேண்டும்.
  6. குறிப்பிடப்பட்ட அபராத தொகையை செலுத்திய பின் இந்த இணைப்பு வெற்றிகரமாக நிறைவேற்றப்படும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here