பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.. எப்படி இணைப்பது?? வழிமுறைகள் இதோ!!!

0

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வரும் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைதும் நிலையில் தற்போது அதன் கால அவகாசம் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு, கொரோனா தொற்று, ஊரடங்கு பாதிப்பு எனப் பல பிரச்னைகளால், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால கெடுவை பல முறை நீடித்துள்ளது. கடைசியாக ஜூன் 30 என நீட்டிக்கப்பட்ட கடைசி நாள் தற்போது மீண்டும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டு உள்ளது.

ஆதாரை எப்படி பான் கார்டுடன் இணைப்பது?

  • முதலில் நீங்கள் இந்த வலைத்தளத்திற்கு செல்லவேண்டும் – www.incometaxindiaefiling.gov.in
  • அங்கு Link Aadhaar என்ற லிங்க் இருக்கும். அதை கிளிக் செய்யவும்
  • பின்னர் உங்களுடைய பான் எண், ஆதார் எண், பெயர் ஆகியவற்றை உள்ளிடவும்
  • சில பேருக்கு ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இருக்காது. அவர்கள் மட்டும் I have only year of birth in Aadhaar Card என்பதை டிக் செய்யவும்.
  • பிறகு, I agree to validate my Aadhaar details with UIDAI என்பதையும் டிக் செய்யவும்.
  • Capcha code ஐ உள்ளீடு செய்து Link Aadhaar என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
  • பின்னர் உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கப்பட்டு விடும்.

இப்பொழுது நீங்கள் உங்கள்  பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்யவேண்டும். அதற்கு மீண்டும் மேற்குறிப்பிட்ட வலைத்தளத்திற்கு சென்று Link Aadhaar பக்கத்திலேயே view status பகுதியை கிளிக் செய்து பான் மற்றும் ஆதார் எண்ணை டைப் செய்து உறுதி செய்து கொள்ள முடியும். உங்கள் பான் கார்டுடன் ஆதார் இணைக்கப்பட்டு இருந்தால் Your pan is Linked to Aadhaar Number என்ற தகவல் திரையில் தோன்றும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here