நமது நாட்டில் வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் ஆதார் ஆவணம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதனால் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர், முகவரி உள்ளிட்டவைகளை அப்டேட் செய்ய இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்தில் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க வாய்ப்புகளையும் செப்டம்பர் 14ஆம் தேதி வரை வழங்கியிருந்தனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இன்னும் ஓரிரு தினங்களில் காலக்கெடு முடிவடைய உள்ளதால், கால அவகாசத்தை நீட்டிக்க பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு 2023 டிசம்பர் 14ஆம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளனர். ஆனால் இ-சேவை மையங்களுக்கு புதுப்பிக்க சென்றால், ரூ.25 கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.