ஆதார் வைத்திருப்பவரே கவனம்., இனி இதுக்காக நீங்க அலைய வேணாம்! வீட்டிலிருந்து ஈஸியா முடிக்கலாம்!!

0
ஆதார் வைத்திருப்பவரே கவனம்., இனி இதுக்காக நீங்க அலைய வேணாம்! வீட்டிலிருந்து ஈஸியா முடிக்கலாம்!!
ஆதார் வைத்திருப்பவரே கவனம்., இனி இதுக்காக நீங்க அலைய வேணாம்! வீட்டிலிருந்து ஈஸியா முடிக்கலாம்!!

ஆதார் கார்டில் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி போன்றவற்றை மாற்ற இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றி, வீட்டிலிருந்தபடியே ஈசியாக செய்து முடிக்கலாம்.

எளிய வழிகள் :

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 12 இலக்க ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் கார்டில் பெயர், பாலினம், முகவரி மற்றும் பிறந்த தேதி போன்றவற்றில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை கண்டிப்பாக திருத்தம் செய்ய வேண்டும். தற்போது, இந்த ஆதார் திருத்தத்தை வீட்டிலிருந்தபடியே ஈசியாக செய்வதற்கான, வழிமுறைகள் கீழே தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை செய்வதற்கு முதலில், UIDAI என்ற அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல வேண்டும். அங்கு “My aadhar” என்பதை கிளிக் செய்து ” ஆதார் புதுப்பி ஆன்லைனில்” என்பதை தேர்வு செய்யவும். அதன் பிறகு, ஆதார் எண் மற்றும் கேப்சா ஆகியவைகளை உள்ளீடு செய்து “Send OTP” என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும், ஓடிபி நம்பரை உள்ளிட்டால், ஆதாரில் திருத்தங்கள் செய்வதற்கான பக்கம் ஓப்பனாகும்.

இதில் பயனர்கள், எந்த விவரத்தை மாற்ற வேண்டும் என்பதை தேர்வு செய்து அதை சரியாக மாற்றி, அதற்குரிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பிறகு அதற்குரிய கட்டணத்தை செலுத்தி, அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளவும். இதையடுத்து திருத்தப்பட்ட ஆதார் கார்டை இரண்டு மாதங்களுக்குப் பிறகு பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here