ஆதார் கார்டில் மோசடி!! 127 பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய UIDAI..!

0

போலியான ஆவணங்களை சமர்ப்பித்து ஆதார் கார்டு பெற்றதாக 127 பேருக்கு UIDAI (Unique Identification Authority of India) ஹைதராபாத் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் அதற்கும் அவர்களின் குடியுரிமைக்கும் எந்த வித தொடர்பும் இல்லையெனவும் தெரிவித்து உள்ளது.

182 நாட்களுக்கு மேல்..!

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு ஆதார் கார்டு வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் ஆதார் குடியுரிமைக்கான ஆதாரம் இல்லை. ஆதார் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர் 182 நாட்களுக்கு மேல் இந்தியாவில் குடி இருந்திருக்க வேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஆதார் அலுவகத்தில் 127 பேர் போலியான ஆவணங்களை அளித்து ஆதார் கார்டு பெற்றதாக போலீசார் புகார் அளித்து உள்ளனர்.

மார்ச் 31க்குள் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைத்து விடுங்கள் – இல்லைனா செல்லாது..!

குடியுரிமைக்கும் சம்மந்தம் இல்லை..!

போலீசார் தெரிவித்த 127 பேரும் வரும் 20ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அப்போது அவர்கள் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களது ஆதார் கார்டை ரத்து செய்யும் உரிமம் அரசுக்கு உள்ளது எனவும் இதற்கும் குடியுரிமைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here