ஆதாரில் முகவரி மாத்தணுமா?? இதோ 5 நிமிடத்தில் வீட்டில் இருந்தபடியே செய்துடலாம்!!

0

இந்தியாவில் ஆதார் கார்டு அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் பல தவறுகள் நடப்பதால் அதனை திருத்தம் செய்வதற்கு மக்கள் திணறி வருகின்றனர். தற்போது அதற்கான எளிய வழிமுறைகளை இந்த செய்தியில் காணலாம்.

ஆதார்:

இந்திய அரசு குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டை கட்டாயமாக்கியது. எனவே தற்போது புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் எடுப்பவர்கள் அதனுடன் ஆதார் கார்டையும் சேர்ந்து எடுத்து விடுகின்றனர். ஆனால் சிலருக்கு ஆதார் கார்டில் பல பிழைகள் ஏற்பட்டு விடுகிறது. அதில் அதிகமாக ஏற்படுவது முகவரி பிழை தான். இதனை மாற்றுவதற்கு சில மக்கள் திணறி வருகின்றனர். தற்போது அதற்கான எளிய வழிமுறைகள் இதோ.

வழிமுறை:

  • பயனாளர்கள் தங்களது முறையான முகவரி எதில் இருக்கிறதோ அதை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளவும். சான்றாக, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, வங்கி பாஸ்புக், தொலைபேசி கட்டண பில், வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசன்ஸ் அல்லது கிராம அலுவலரிடம் பெற்ற கடிதம் இதில் ஏதாவது ஒன்று.
  • பின்பு பயனாளர்கள் https://ss up.uidai.gov.in/ssup/login.html என்ற தளத்திற்கு செல்ல வேண்டும். பின்பு அங்கு உங்கள் ஆதார் கார்டு நம்பர், அதில் கேட்கப்படும் கேப்சா ஆகியவற்றை முறையாக பதிவு செய்யவேண்டும். பின்பு பயனாளர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட போன் நம்பரை பதிவு செய்யவேண்டும். பதிவு செய்யப்பட்ட நம்பருக்கு ஓர் ஒடிபி வரும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

புதுவையில் வாட்ஸ்ஆப் பிரச்சாரத்தால் ஏற்பட்ட சர்ச்சை?? ஆதார் மையத்தை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!!

  • அதனை பதிவு செய்து, அடுத்து வரும் பக்கத்தில் முகவரி என்னும் ஆப்ஷனை கிளிக் செய்யவேண்டும். பின்பு அதில் முறையான முகவரியை பதிவு செய்து அதற்காக ஸ்கேன் செய்த ஆவணத்தையும் பதிவு செய்ய வேண்டும்.
  • பின்பு அதற்கான கட்டண தொகையான ரூ.50 செலுத்த வேண்டும். அவ்வளவு தான் வழிமுறைகள். இதற்கு பின் பயனாளர்கள் ஓர் URN நம்பரை பெறுவர். அதனை வைத்து உங்கள் ஆதார் ஸ்டேட்டஸ் மற்றும் நீங்கள் செய்த மற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆதார் ஸ்டேட்டஸை https://resident.uidai.gov.in/check-aadhaar என்ற தளத்திற்கு செய்து பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • பின்பு ஓர் வாரம் அல்லது 15 நாட்களுக்குள் ஒரிஜினல் ஆதார் கார்டு வீடு தேடி வந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here