ஆதார் அட்டையை ஷேர் பண்ண போறிங்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்!!

0
ஆதார் அட்டையை ஷேர் பண்ண போறிங்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்!!

இன்றைய காலகட்டத்தில் வங்கி கணக்கு, பான் கார்டு, செல்போன் எண், அரசு மானியங்கள் பெற, வருமான வரி கணக்கு இப்படி ஏராளமான சேவைகளை பெற ஆதார் அட்டை கட்டாயமாகும். இதை தொடர்ந்து நாடு முழுவதிலும் மக்கள் தங்கள் அடையாளத்திற்காகாவும் இந்த அட்டையை பயன்படுத்துகிறார்கள். இதனால் ஆதார் அட்டையின் புகைப்பட நகல் அல்லது பதிவிறக்கம் செய்யப்பட்ட அட்டை பல இடங்களில் பகிர படுவதால், அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதாக வெளியான தகவல், ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இதுகுறித்து யுஐடிஏஐ சமீபத்திய ட்வீட்டில் கூறியது, பொதுமக்கள் இண்டர்நெட் சென்டர்கள் போன்ற பொது இடங்களில் தங்களுடைய ஆதார் அட்டையை டவுன்லோடு செய்தால், அவற்றின் விவரங்களை உடனடியாக அந்த தளத்திலிருந்து நீக்கி விட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது. இதனால் ஆதார் எண்ணை வைத்து வங்கி கணக்கை,திருடர்கள் ஹேக் பண்ணி விடுவார்களோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வந்தது.

வாட்ஸ்அப் பயனர்களே ஜாக்கிரதை.., இதை செய்தால் அக்கவுண்ட் பிளாக் தான்.., முழு விவரம் உள்ளே!!

அவற்றை போக்கும் வகையில், UIDAI அதன் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ட்வீட்டில், ஆதார் எண்ணை வைத்து வங்கி கணக்கை ஹேக் செய்ய முடியாது. புதிய வழிகாட்டுதல்களின்படி, ஆதார் அட்டையைப் பயன்படுத்துவோர், மாஸ்க் செய்யப்பட்ட ஆதாரை வங்கியிலோ அல்லது வேறு எந்த இடத்திலோ ஆவணமாகப் பகிரலாம். அதாவது மாஸ்க் செய்யப்பட்ட ஆதாரில், முதல் 8 இலக்கங்கள் “xxxx-xxxx” என்று மறைக்கப்பட்டு, அதேசமயம் ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்கள் மட்டுமே காட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here