ஆதார் எண்ணை வைத்து மோசடிகள்? விளக்கம் கொடுத்துள்ள UIDAI!!

0
ஆதார் எண்ணை வைத்து மோசடிகள்? விளக்கம் கொடுத்துள்ள UIDAI!!

ஆதார் எண்ணின் மூலம் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவதாக, வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் UIDAI தற்போது ட்விட்டரில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது.

ஆதார் அட்டை:

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களும் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆவணங்களில் ஓன்று ஆதார் அட்டை. அதாவது தற்போதைய சூழலில் குழந்தைகளை பள்ளிக்கு சேர்ப்பது முதல் வங்கிக்கணக்கு துவங்குவது என முக்கிய இடங்களில் ஆதார் எண் இல்லாமல் ஒன்றுமே செய்ய முடியாது. எனவே சில இடங்களில் ஒரிஜினல் ஆதார் அட்டையை கொடுக்கும் நிலையும் வருகிறது. இந்நிலையில் ஆதார் எண்ணை வைத்து பல மோசடிகளும் அவ்வப்போது அரங்கேறி வருவதாக செய்திகள் பரவி வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் UIDAI ட்வீட் செய்துள்ளது. அதில் 12 இலக்க ஆதார் அடையாள அட்டை எண்களை பயன்படுத்தி உங்களின் வங்கிக் கணக்கை ஹேக் செய்ய முடியாது என விளக்கம் கொடுத்துள்ளது. மேலும் ஆதார் எண்ணை ஷேர் செய்ய விரும்பவில்லை என்றால், மாஸ்க் ஆதார் என்ற வசதியை பயன்படுத்தலாம் என கூறியுள்ளது.

“Work From Home” க்கு வேட்டு வைத்த பிரபல IT நிறுவனம்.,, ஊழியர்களுக்கு ஷாக்!!

அதாவது, ஆதார் அடையாள அட்டையில் 12 இலக்க ஆதார் எண் வெளிப்படையாக இருக்கும். ஆனால் மாஸ்க் ஆதாரில் முதல் 8 இலக்க எண்கள் XXXXXXX இப்படி மறைக்கப்பட்டு இருக்கும், மேலும் கடைசி நான்கு இலக்க எண்கள் மட்டும வெளிப்படையாக தெரியும். இது மிகவும் பாதுகாப்பானவையாகும்.

  • மாஸ்க் ஆதாரை டவுன்லோடு செய்யும் முறை:
  • முதலில் uidai.govi.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  • பின்னர் ‘Do You Want A Masked Aadhaar’ என்பதை click பண்ண வேண்டும்.
  • அதன் பின், முன் தொடர்பு எண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிடவும்.
  • பின், ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் எண்ணிற்கு OTP அனுப்பப்படும்.
  • இதனை அதற்கான இடத்தில் டைப் செய்து மாஸ்க் ஆதார் அட்டையை டவுன்லோடு செய்துக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here