ஆதார் எண் இனி ‘இதற்கு’ கட்டாயம் – மாநில அரசுகளுக்கு UIDAI சுற்றறிக்கை!

0
ஆதார் எண் இனி 'இதற்கு' கட்டாயம் - மாநில அரசுகளுக்கு UIDAI சுற்றறிக்கை!
ஆதார் எண் இனி 'இதற்கு' கட்டாயம் - மாநில அரசுகளுக்கு UIDAI சுற்றறிக்கை!
ஆதார் எண் இனி ‘இதற்கு’ கட்டாயம் – மாநில அரசுகளுக்கு UIDAI சுற்றறிக்கை!

மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியங்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதற்கு இனி ஆதார் எண் கட்டாயம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு ஆகஸ்ட் 11 ஆம் தேதி சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

UIDAI சுற்றறிக்கை:

மத்திய – மாநில அரசுகளின் மானியங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை பெற, இனி ஆதார் எண் அல்லது ஆதார் அட்டை வேண்டி விண்ணப்பித்ததற்கான ஒப்புகை சீட்டு கட்டாயம் என, அனைத்து மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகளுக்கு, இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதாவது யு.ஐ.டி.ஏ.ஐ ஆதார் அட்டைகளை வினியோகித்து வருகிறது. மேலும் மத்திய – மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள், மானியங்கள், வங்கி சேவைகள் உட்பட பல்வேறு விதமான சேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் யு.ஐ.டி.ஏ.ஐ அளித்த புள்ளி விவரத்தின்படி, நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 99 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் சட்டப்பிரிவு 7ன்படி, ஆதார் அட்டை பெறாதவர்கள், அரசு அளித்துள்ள இதர அதிகாரப்பூர்வ அடையாள அட்டை வாயிலாக சேவைகளை பெறுவதற்கு தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில், யு.ஐ.டி.ஏ.ஐ சில மாற்றங்களை தற்போது அறிவித்துள்ளது. இது தொடர்பாக, மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு, யு.ஐ.டி.ஏ.ஐ கடந்த 11ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியது. மத்திய – மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்ட உதவிகள், மானியங்கள் உள்ளிட்டவை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மத்திய – மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள், மானியங்கள் ஆகியவற்றை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள், அட்டை வேண்டி விண்ணப்பிக்க வேண்டும். அட்டை கிடைக்கும் வரை, விண்ணப்பித்ததற்கான ஒப்புகை சீட்டுடன், அரசு அளித்த அதிகாரப்பூர்வ அடையாள அட்டையையும் சேர்த்து சமர்ப்பித்து உதவிகளை பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஆதார் எண் அல்லது பதிவுச் சீட்டு இல்லையென்றால், அரசாங்க மானியங்கள் மற்றும் பலன்களைப் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here