அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மாதம் ரூ.1000 உதவித்தொகை திட்டம்., உடனே இதை முடிங்க! அரசு அறிவிப்பு!!

0
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மாதம் ரூ.1000 உதவித்தொகை திட்டம்., உடனே இதை முடிங்க! அரசு அறிவிப்பு!!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மாதம் ரூ.1000 உதவித்தொகை திட்டம்., உடனே இதை முடிங்க! அரசு அறிவிப்பு!!

இந்தியாவில் ஏழை, எளிய மாணவர்களை பொருளாதார ரீதியாக ஊக்குவிக்க ஆண்டுதோறும் மத்திய அரசு NMMS தேர்வை நடத்தி வருகிறது. இதன்படி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதில் நாடு முழுவதும் ஒரு லட்சம் பள்ளி மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாதம் ரூ.1000 உதவித்தொகையாக மத்திய அரசு வழங்கி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து இதுவரை NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தொடர்ந்து உதவித்தொகை பெறுவதற்கான புதுப்பித்தல் (Renewal) பணி ஜனவரி 10ம் தேதியுடன் முடிவுற்றது. தற்போது இதில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு முக்கிய நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்கு வாய்ப்பு., ரிசர்வ் வங்கி கொடுத்த விளக்கம்!!

அதன்படி மாணவர்கள் எவ்வித பிரச்சனையும் இன்றி உதவித்தொகை பெறுவதற்கு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்த தகவல்களை பள்ளி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here