தமிழகத்தில் வீரியமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்.., 27 வயது இளைஞர் உயிரிழந்த பரிதாபம்!!!

0
தமிழகத்தில் வீரியமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்.., 27 வயது இளைஞர் உயிரிழந்த பரிதாபம்!!!
தமிழகத்தில் வீரியமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்.., 27 வயது இளைஞர் உயிரிழந்த பரிதாபம்!!!

இந்தியாவில் சமீப காலமாக இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வைரஸ் காய்ச்சல் பொதுமக்களை வெகுவாக பாதித்து வருகிறது. இதுபோன்ற அறிகுறிகள் இந்த பருவகாலங்களில் வருவது இயல்பு என்று கடந்து சென்ற வேளையில் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வகையை சேர்ந்த வைரஸ் என ICMR எச்சரிக்கை விடுத்தது. இந்த வைரஸ் காய்ச்சல் அனைத்து பகுதிகளிலும் அதிவேகமாக பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம் நிறுவப்பட்டு பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல், தலைவலி, உடல் வலி, சோர்வு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். 3 முதல் 7 நாட்கள் வரை பாதிப்பை ஏற்படுத்திய இந்நோய் தற்போது உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது. அதன்படி கர்நாடகா, ஹரியானவை தொடர்ந்து தமிழநாட்டிலும் ஒருவர் வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான இளைஞர் பெங்களூரு நிறுவனத்தில் Software என்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

கோவில் திருவிழாக்களில் குறவன்-குறத்தி ஆட்டத்திற்கு தடை., அரசு அதிரடி அறிவிப்பு!!

இவர் கடந்த 9ம் தேதி கோவா ட்ரிப் முடித்து விட்டு திருச்சியில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸின் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன்மூலம் தமிழ்நாட்டில் இந்த வைரஸால் முதல் உயிரிழப்பு பதிவாகி பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம், சோசியல் டிஸ்டன்ஸ் உள்ளிட்டவைகளை கடைபிடிக்க சுகாதாரத்துறை மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here