குஜராத் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.,வீடுகளை விட்டு வீதியில் தஞ்சமடைந்த மக்கள்!!

0
குஜராத் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.,வீடுகளை விட்டு வீதியில் தஞ்சமடைந்த மக்கள்!!
குஜராத் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.,வீடுகளை விட்டு வீதியில் தஞ்சமடைந்த மக்கள்!!

உலகெங்கும் ஏற்படும் இயற்கை சீரழிவுகளால் மனித உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதன் அடிப்படையில் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயரமான கட்டிடங்கள் இருந்த இடம் தெரியாமல் உருக்குலைந்து போனது. இதனால் இடிபாடுகளில் சிக்கி பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டதால் தாய் தந்தையரை இழந்த குழந்தைகள் பரிதவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் கடந்த பிப்ரவரி 24, 26ம் தேதிகளில் அடுத்தடுத்து 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை 03.42 மணி அளவில் நில அதிர்வு ஏற்பட்டது.

TNPSC குரூப்-4 தேர்வு முடிவுகள்., இம்மாத இறுதியில் வெளியிட முடிவு! வெளியான திடீர் அறிவிப்பு!!

இதனால் இப்பகுதி மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி வீதியில் திரண்டனர். பின்னர் சோதனை முடிவில் 3.3 அளவில் லேசான நிலநடுக்கம் பதிவாகியதாகவும், இதனால் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்பதையும் அதிகாரிகள் உறுதி செய்தனர். இருந்தாலும் சமீப காலமாக தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் குஜராத் மாநில மக்கள் எந்நேரமும் அச்சத்திலே உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here