சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக சைலேந்திரபாபு இருந்த போது பெண்கள் பாதுகாப்புக்கு புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. அதாவது வேலை காரணமாக தனியாக செல்லும் பெண்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் 1091 மற்றும், 112 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள அறிவருத்தப்பட்டிருந்தது. இதன் மூலம் காவலர்கள் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வார்கள் என்றும் தெரிவித்திருந்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால் பெண்களின் பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடையவில்லை. இது குறித்து சில அதிகாரிகள் கூறியதாவது, “பெண்கள் பாதுகாப்பிற்காக ஏற்கனவே பல திட்டங்கள் உள்ளன. இப்படி இருக்கையில் தமிழக அரசிடம் ஒப்புதல் பெறாமல் அவசர அவசரமாக இந்த திட்டத்தை கொண்டு வந்தது தேவையற்ற ஒன்று தான். மேலும் இத்திட்டம் குறித்து போலீஸாருக்கும் எந்த ஒரு பயிற்சியும் கொடுக்கவில்லை. இது தவிர ஒரு நாளைக்கு ஐந்து பெண்கள் கூட இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளவில்லை” என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., ஜூலை மாத அகவிலைப்படி உயர்வு வந்தாச்சு? மாஸ் அப்டேட்!!!