
தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் நிரந்தர வேலைக்காக பல்வேறு நிறுவனங்களை தேடி அழைக்கின்றனர். இவர்களின் தேடல்களை எளிமையாக்கும் விதமாக மாவட்டந்தோறும் முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்குபெறும் வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இந்திலி RKS கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 9 மணி அளவில் நடைபெற உள்ள இந்த முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, இன்ஜினியரிங், அக்ரி, நர்சிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட் போன்ற கல்வித்தகுதிகளை பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அரசு ஊழியர்களே கவனம்., பழைய ஓய்வூதியத்திற்கு மாற கடைசி சான்ஸ்! மனமிறங்கிய மத்திய அரசு!!
மேலும் இதில் தகுதியானவர்கள் தேர்வாகும் பட்சத்தில் உடனடியாக பணி நியமனம் வழங்கப்படும். எனவே முகாமில் பங்குபெறுபவர்கள் தங்களின் புகைப்படம், சுயவிவரம், சான்றிதழ் நகல் உள்ளிட்டவைகளை தயார் செய்து கலந்து கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.