தமிழக மக்களே உஷார்.,அதிகரிக்கும் ஆன்லைன் கொள்ளை! இதெல்லாம் தெரியாம பணம் கட்டாதீங்க!!

0
தமிழக மக்களே உஷார்.,அதிகரிக்கும் ஆன்லைன் கொள்ளை! இதெல்லாம் தெரியாம பணம் கட்டாதீங்க!!
தமிழக மக்களே உஷார்.,அதிகரிக்கும் ஆன்லைன் கொள்ளை! இதெல்லாம் தெரியாம பணம் கட்டாதீங்க!!

உலகெங்கும் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பட்டிதொட்டியெங்கும் இன்டர்நெட் பயன்பாடு பெருகி வருகிறது. இதன் மூலம் பல நற்பலன்கள் இருந்தாலும் மக்களை ஏமாற்றி பணம் கொள்ளையடிக்கும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. இதனால் சமீபகாலமாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. எனவே மக்கள் இணையம் சார்ந்த பரிவர்த்தனைகளை பயன்படுத்தும் போது எச்சரிக்கையாக இருக்க சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எடுத்துரைத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது யூ டியூப், டெலிகிராம் போன்ற ஊடகங்களில் பதிவிடப்படும் பதிவுகளை லைக், ஷேர் செய்தால் ஊதியம் வழங்கப்படும் என விளம்பரப் படுத்துகின்றனர். பயனாளர்கள் இதனை கண்டு சிறிய அளவிலான முதலீடு செய்து சில ஆயிரங்களில் ஊதியம் பெற்று கொள்வார்கள். சில நாட்கள் கழித்து இந்த போலியான வெப்சைட்டில் பெரிய தொகையை முதலீடு செய்தால் ஆஃபர் என அறிவுறுத்துவார்கள். இதையும் நம்பி பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்து பின்னர் அந்த பணத்தை உங்களது வங்கி கணக்கிற்கு மாற்ற பிராசஸிங் பீஸ், வித்டிராவல் பீஸ் என குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்வதாக கூறுவார்கள். அதுவும் சில நாட்களில் வெப்சைட் டவுன் செய்து மொத்த தொகையையும் திருடி சென்று விடுகிறார்கள்.

தமிழக மாணவர்கள், இளைஞர்கள் whatsapp குழுக்களுக்கு கெடுபிடி., இத செஞ்சா ஜெயில் கன்பார்ம்!!

இப்படி ஒருபுறம் இருக்க மறுபுறம் தனியார் வங்கிகளை போல் வெப்சைட் உருவாக்கி அதிலிருந்து லிங்க் ஒன்றின் மூலம் பயனாளர்கள் மொபைல் போனுக்கு SMS அனுப்புவார்கள். அதில் பான் கார்டு, ஆதார் கார்டு லிங்க் செய்ய வேண்டும் இல்லையெனில் அக்கவுண்ட் close ஆகி விடும் என வங்கி அனுப்புவது போல் அனுப்புவார்கள். இதை நம்பி க்ளிக் செய்து பயனாளர்கள் தங்களது யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு களை பதிவிட்ட உடன் இந்த விவரங்களை மர்ம கும்பல் திருடி விடுகின்றனர். பின்னர் பயனாளர்களின் விவரங்களை வைத்து வங்கி கணக்கில் உள்ள மொத்த பணங்களையும் கொள்ளையடித்து விடுகின்றனர். மேலும் லோன் வழங்குவதாக கூறி ஆதார் மற்றும் பான் விவரங்களை சேகரித்து வைத்து கொள்வார்கள். பின்னர் உங்களது பேரில் வேறு அதிகாரபூர்வ வங்கியில் லோன் எடுத்து உங்களை பிரச்சனைகளில் சிக்க வைத்து விடுகின்றனர். எனவே இணையங்களில் உலாவும் போது எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here