தமிழகத்தில் பரவி வரும் புதிய வகை காய்ச்சல்.,, அதிரவைக்கும் பகீர் தகவல்!!

0
தமிழகத்தில் பரவி வரும் புதிய வகை காய்ச்சல்.,, அதிரவைக்கும் பகீர் தகவல்!!

தமிழகம் மற்றும் புதுவையை பீதியில் ஆழ்த்தி வரும் புதிய வகை காய்ச்சல், கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய வகை காய்ச்சல்:

நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவின் தாக்கம் தற்போது தான் குறைந்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தும் வகையில், புதிய வகை காய்ச்சல் புதுவையில் தீவிரமாக பரவி வருகிறது. இதன் எதிரொலியாக ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு வரும் செப் 25ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த புதிய வகை காய்ச்சல் தமிழகத்தில், கடலூர் மாவட்டத்தில் வேகம் எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அதாவது புதிய வகை காய்ச்சலால் ஆயிரக்கணக்கானோர், கடலூரில் பாதிப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் இன்று சிகிச்சைக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காய்ச்சல் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துமாம். மேலும் இந்த தொற்றுக்கான அறிகுறிகள் காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்டவைகள் ஆகும். ஆனால் இது மழைக்காலத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல் தான் என்றும், இதனை கண்டு மக்கள் பயப்பட வேண்டாம் என்றும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் சாதாரண காய்ச்சலுக்கான மருத்துகள் தான், இந்த தொற்றுக்கும் வழங்கப்படுவதாகவும், இருப்பினும் 1 வாரம் வரை இந்த காய்ச்சல் இருக்கும் என கூறுகின்றன. மேலும் இந்த காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த, சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நகர்ப்புறங்களை விட கிராமப்புற மக்கள் இந்த காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதால் கிராமங்களில் மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here